Saturday, November 14, 2009

பெர்லின் சுவரும் அதன் சுவடுகளும்…

பெர்லின் சுவர் இடிப்பு: ஒரு சரித்திரத் தவறு திருத்தப்பட்டதன் 20-வது ஆண்டு

பெர்லின் சுவர்…

மனித சுதந்திரத்துக்கு எதிரான அடையாளமாகப் பார்க்கப்பட்ட இந்த சுவர் தகர்க்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகின்றன. 1989 ம் ஆண்டு இதே நவம்பர் மாதத்தில்தான் மக்களால் தகர்க்கப்பட்டது.

இன்று பெர்லினில் அந்நாட்டு மக்கள் பெரும் உற்சாகத்துடன் இந்த நாளைக் கொண்டாடுகின்றனர். காரணம் பெர்லின் சுவரின் ‘பின்னணி’, அந்த சுவர் தகர்க்கப்பட்டதால் தாங்கள் அடைந்த சுதந்திரத்தின் மதிப்பு போன்ற உண்மைகள் புரிந்தவர்கள் அவர்கள்.

பெர்லின் சுவர் கட்டப்பட்டதன் பின்னணி?

இரண்டாம் உலகப் போருக்கு முன்பு வரை ஜெர்மனி என்பது ஒரே நாடு. ஆனால் போரில் ஹிட்லரின் நாஸிப் படைகள் தோற்ற பிறகு ஜெர்மனியை நான்கு துண்டுகளாக கூறுபோட்டன சோவியத் ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நேசநாடுகள். அவரவருக்குப் பிடித்த பகுதிகளை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டுவந்தனர். ஜெர்மனியின் ஒன்றுபட்ட தலைநகராக இருந்த பெர்லின் நகரும் நான்கு துண்டுகளாக்கப்பட்டது.

ஆனால் அடுத்த இரண்டே ஆண்டுகளில் நேச நாடுகளுக்குள் கடும் மோதல் எழ, சோவியத் ரஷ்யாவைத் தவிர மற்ற மூன்று நாடுகளும் ஓரணியாக நின்றன. இவை தங்கள் வசமிருந்த ஜெர்மனியின் பகுதிகளை தனி நாடாக்கின. அதுதான் மேற்கு ஜெர்மனி.

சோவியத் ஒன்றியம் மட்டும் தன்னிடமிருந்த பகுதியை தனி நாடாக அறிவித்தது 1949-ல். அதுதான் கிழக்கு ஜெர்மனி (ஜிடிஆர் – ஜெர்மன் டெமாக்ரடிக் ரிபப்ளிக்) இதன் தலைநகராக கிழக்கு பெர்லின் இருந்தது. மேற்கு ஜெர்மனியின் தலை நகர் மேற்கு பெர்லின்.

சோவியத் ஒன்றியம் மட்டும் தன்னிடமிருந்த பகுதியை தனி நாடாக அறிவித்தது 1949-ல். அதுதான் கிழக்கு ஜெர்மனி (ஜிடிஆர் – ஜெர்மன் டெமாக்ரடிக் ரிபப்ளிக்) இதன் தலைநகராக கிழக்கு பெர்லின் இருந்தது. மேற்கு ஜெர்மனியின் தலை நகர் மேற்கு பெர்லின்.

கிழக்கு மேற்கு பெர்லின்கள் அடிப்படையில் ஒரே நகரம்தான். சென்னை அண்ணா சாலைக்கு இந்தப் பக்கம் ஒரு நகரம், அந்தப் பக்கம் ஒரு நகரம் என்று திடீரென்று எல்லை வகுத்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இது. சோவியத் – அமெரிக்க பனிப்போரின் உச்சகட்ட நாட்கள் அவை.

இதனால் கிழக்கு ஜெர்மனியிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் மேற்கு ஜெர்மனிக்கு ஓடிவிட்டார்கள். குறிப்பாக 1950, 51, 52, 53-ம் ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் சட்டவிரோதமாக இப்படி எல்லை கடந்தார்கள். எனவே தனது அனைத்து எல்லைகளையும் சீல் வைத்து மக்களை ஓடவிடாமல் தடுத்தது கிழக்கு ஜெர்மனி.

ஆனால் பெர்லின் நகருக்குள் ஊடுருவலைத் தடுக்க முடியவில்லை.

எனவே 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி பெர்லினுக்குக் குறுக்கே பெரிய சுவர் எழுப்பி மக்கள் இருபுறமும் செல்லாதபடி தடுத்தது கிழக்கு ஜெர்மனி. சுவருக்கு அந்தப் பக்கம் அமெரிக்காவும், இந்தப் பக்கம் சோவியத்தும் படைகளை நிறுத்தி வைத்திருந்தன.

உரிமைகள், உறவுகள், வர்த்தகம், வாழ்க்கை முறை என அனைத்து வழிகளிலும் பாதிக்கப்பட்டனர் மக்கள். 28 ஆண்டுகள் இந்த பாதிப்பு தொடர்ந்தது. கிழக்கு ஜெர்மனி மக்கள் அந்த சுவரைத் தாண்ட முயற்சித்த போது சுட்டுக் கொல்லப்பட்டனர்… அல்லது கைதாகி சிறைவாசம் அனுபவித்தனர்.




பெர்லின் சுவருக்கு முடிவு கட்டிய முன்னாள் சோவியத் அதிபர் மிகையீல் கார்பசேவ், அமெரிக்க அதிபர் புஷ் (சீனியர்) மற்றும் ஜெர்மனியின் சான்ஸலர் ஹெல்மட் கோல்




சோவியத் – அமெரிக்க பனிப்போரின் இறுதிதான், மக்களைப் பிரித்து வைத்திருந்த இந்த நீண்ட பெர்லின் சுவருக்கு முடிவு கட்டியது.

1989ம் ஆண்டு நவம்பர் 9-ம் நாள் மக்கள் இந்த சுவரைத் தாண்டி சந்தித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அடுத்த இரு தினங்களில் சுவரின் ஒரு பகுதியை மக்களே அடித்து நொறுக்கிவிட்டனர். கிழக்கு மேற்காகப் பிரிந்திருந்த ஜெர்மனிகளும் ஒன்றாகின.

இன்று பெர்லின் சுவர் இருந்த இடத்தில் அதன் சுவடு மட்டுமே மிச்சமுள்ளது. 20 ஆண்டுகள் கடந்து விட்டன… காலம் மக்களின் வலிகளை, மனதின் ரணங்களை ஆற்றிவிட்டாலும், இந்த சுதந்திரத்துக்கு தாங்கள் கொடுத்த விலையை நினைவுபடுத்திக் கொள்கின்றனர் ஜெர்மனி மக்கள். காயம் குணமாகிவிட்ட இடத்தில் மிச்சமிருக்கும் வடுவைத் தடவி, வலியை நினைவுபடுத்திக் கொள்ளும் ஒரு முயற்சிதான் இது.

இந்த நினைவூட்டல்தான், தாம் அனுபவிக்கும் சுதந்திரத்தின் மதிப்பை அடுத்த தலைமுறைக்கும் உணர்த்தும் என அந்த மக்கள் நம்புவதால் நடத்தப்படும் கொண்டாட்டம் இது.

இனி பெர்லின் சுவர் வரலாறு… அரிய புகைப்பட வடிவில்…



1961: ஆகஸ்ட் 13-ம் தேதி பெர்லினுக்குக் குறுக்கே முள்கம்பி வேலி அமைக்கு பணியில் கிழக்கு ஜெர்மனி வீரர்கள் ஈடுபட்டனர். அதை மேற்கு பெர்லின் மக்கள் வேடிக்கை பார்க்கும் காட்சி.

1961- பெர்லின் நகரின் மையப்பகுதியான கிரன்டன்பர்க் வாயில் முள்கம்பி வேலியமைக்கப்பட்டு சீல்வைக்கப்பட்டது.




1961: கிழக்கு பெர்லின் பகுதியில் சுவர் எழுப்பப்படுவதைப் கண்காணிக்கும் கிழக்கு ஜெர்மனி போலீஸார்…
1961- ல் புதிதாகக் கட்டப்பட்ட பெர்லின் சுவரை எட்டிப் பார்க்கும் மேற்கு பெர்லின் சிறுமி…





1961 -அறுபதுகளில் மிகப் புகழ்பெற்ற புகைப்படம் இது. ஷுமென் எனும் கிழக்கு ஜெர்மனி வீரர் , பெர்லின் சுவரை கட்டிக் கொண்டிருந்தபோதே எகிறி குதித்து மேற்கு ஜெர்மனிக்குள் ஓடும் காட்சி… சோவியத் கட்டுப்பாட்டில் கிழக்கு ஜெர்மனி வாழ்க்கை கொடுமையானது என்பதை உலகுக்குச் சொல்ல அமெரிக்கா இதைப் பயன்படுத்திக் கொண்டது.







அம்மா கிழக்கு பெர்லினில்… மகளோ மேற்கு பெர்லினில்… குறுக்கே நிற்கும் முள்வேலி கொண்டை வைத்த சுவரைத் தாண்டி பாசத்தைப் பரிமாறிக்கொள்ளும் காட்சி…







1962 – பெர்லின் சுவரைக் கடக்க முயன்ற தங்கள் நாட்டுக்காரரை கிழக்கு ஜெர்மனி வீரர்கள் சுட்டுக் கொன்று தூக்கிச் செல்கிறார்கள்.









1962-ஆண்டு பெர்லின் சுவர் தோற்றம்… மொத்த நீளம் நகரின் மேற்குப் புறத்தில் இருந்த மூன்று பகுதிகளிலும் சேர்த்து 156 கிமீ. இதில் பெர்லினைப் பிரித்த சுவரின் நீளம் 43 கிமீ.






1985- கோபுரம் அமைத்து கண்காணிக்கும் கிழக்கு ஜெர்மனி வீரர்கள்…







1989 – பெர்லின் சுவருக்கு எதிராய் கிழக்கு ஜெர்மனி மக்கள் நடத்திய போராட்டம்…










1989-நவம்பர் – பெர்லின் சுவரை உடைக்கும் மேற்கு ஜெர்மனிவாசிகள். கிழக்கு ஜெர்மனி போலீசார் அமைதியாக வேடிக்கைப் பார்க்கிறார்கள்…











1989- நவம்பர்- உடைக்கப்பட்ட சுவரின் வழியே எட்டிப்பார்க்கும் கிழக்கு ஜெர்மனி போலீஸ்காரர்.











28 ஆண்டுகள் மக்களைச் சிறைவைத்திருந்த சுவரை, மக்களே உடைத்த காட்சி…












1989 நவ 12 -மேற்கு ஜெர்மனிக்குள் வெள்ளமாய் நுழையும் மக்கள்..














பெர்லின் சுவரும்… அதன் சுவடுகளும்!











2009: சரித்திர சின்னமாய் மிச்சமிருக்கும் பெர்லின் சுவர்












2009- நவம்பர் 9-12: பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் 20ம் ஆண்டு கொண்டாட்டம்
copy by -http:///

வேட்டைக்காரன் – விமர்சனம்!!

வேட்டைக்காரன் – விமர்சனம்!!



வேட்டைக்காரன்… எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படத்தின் பெயரில் வெளிவர இருக்கும் தற்கால எம்.ஜி.ஆர், அடுத்த தளபதி விஜய் ‘நடிப்பில்’ வெளிவர இருக்கும் அதிரடி திரைப்படம்.


நானும் அப்படியே ஆர்வமிகுதியில் ஒட்டிக்கொண்டு படத்தை பார்த்துவிட்டேன். என்னுடன் அப்படியே ஒரு இருநூறு பேர் பார்த்தனர். அவர்களுடன் ஒரு இரண்டாயிரம் பேர் பார்த்தனர். இது மக்களுக்கு படத்தின் மீதுள்ள ஆர்வத்தையே காட்டியது.
வழக்கமாய் ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு கெட்டப் போட்டு மேக்கப்பிலும், நடிப்பிலும் வித்தியாசம் காட்டும் விஜய் இந்தப்படத்தில் தனது இயல்பான முகத்தில் நான்கு நாள் மீசை தாடியுடன் நடித்துள்ளார். ‘மதுர’ திரைப்படத்தில் கர்சீப்பை காலிலும், ‘போக்கிரி’யில் கையிலும் கட்டி கெட்டப் மாற்றி நடித்திருந்த விஜய் இந்தப் படத்தில் கர்சீப்பை தலையில் கட்டி மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் தோற்றமளிக்கிறார்!
கதை என்னவென்றால், விஜய் உழைத்துதான் ‘உணவு’ உண்ண வேண்டும் என்ற கொள்கை கொண்ட இளைஞர். ஆனால் தற்சமயம் வேலையில்லாமல் இருக்கும் காரணத்தால் ஓசியில் ‘டீ’ மட்டுமே குடித்து வாழ்கிறார்.
இதவரையில் விஜய் படங்களில் நாம் பார்த்திராத (கேட்டிராத) அறிமுகப் பாடல் இப்படத்தில் உண்டு. ‘டண்டனக்கு டண்டணக்கு’ என்பதற்கு பதிலாக ‘டண்டானக்கு டண்டாணக்கு’ என மிகவும் புதிதாக இசையமைத்துள்ளார் விஜய் ஆண்டனி.
“நீ அடிச்சா தான் மாஸ்.. நான் கடிச்சாலே மாஸ்” போன்ற பஞ்ச் டயலாக்குகளுடன் தொடங்கிய படம், காமடியன் சத்யனுடன் சில நகைச்சுவைகள், பின் உள்ளூர் தாதாவின் கடையடைப்பை எதிர்த்து அவர்களை துவம்சம் பண்ணுதல், பின் ஊர்காரர்கள் இவருக்கு ஆரத்தி எடுத்தல் என்பது போன்ற படு வித்தியாசமான காட்சிகளுடன் கதை விர்ர்ர்ர்ர்ரென நகர்கிறது.
இந்நிலையில் நண்பர்களுடன் வெட்டி அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் போது ஒரு பஸ் ஸ்டாப்பில் அனுஷ்காவை சந்திக்கிறார் விஜய்.
அனுஷ்காவின் பாவாடை ஓரமாக கிழிந்துள்ளதைக் கண்டு அனுஷ்காவை தெருவில் வைத்தே திட்டி தீர்க்கிறார். இந்தியாவின் பொருளாதாரம் இதனால் எப்படி பாதிக்கப்படுகிறது என்பது பற்றியும், ஓபாமாவின் வீட்டு நாய்க்கு இதனால் எப்படி வயித்துப்போக்கு ஏற்பட்டது எனவும், மிகவும் காட்டமாகவும், தீவிரமாகவும் விளக்குகிறார்.
தனது வலது கையை மார்பு வரையில் மல்லாக்க உயர்த்தி, “கிழிஞ்சாதான் பாவாட.. கிழியலேனா மானாட மயிலாட” என்று ‘அர்த்தத்துடன்’ பஞ்ச் டயலாக் பேசுகிறார்.
அனுஷ்காவை கிழிந்த பாவாடையை தைக்கும் படி திட்டிவிட்டு, பின் தன் வீட்டில் தனது கிழிந்த ட்ரவுசரைப் பார்த்து அழுகும் காட்சியில் விஜய் பின்னியிருக்கிறார். அழுது கொண்டே ஸ்விட்சர்லாந்தில் ஒரு குத்துப் பாட்டு பாடுகிறார். இதற்கு நடுவில் அனுஷ்கா பாவாடையை மாற்றியவுடன் ஒரு குத்துப் பாடல் வருகிறது. (இந்தப் பாடலில் அனுஷ்காவின் உடைக்கு முதலில் போட்டிருந்த கிழிந்த பாவாடையே பரவாயில்லையென ரசிகர்கள் முணுமுணுத்தது கேட்டது!).
இந்தக் கட்டத்தில் தான் கதையில் யாருமே எதிர்பாராத திருப்பம் வருகிறது, அதாவது அனுஷ்காவுக்கு விஜய் மேல் காதல் பிறக்கிறது. ஆனால் விதியோ சதி செய்கிறது!! “யாருமே பார்க்காத அந்த பாவாடை கிழிசலை நீ எப்படி பார்த்த? நீ பார்த்துதொலைச்சது மட்டுமல்லாமல் ஊரையெல்லாம் கூட்டி என் தங்கச்சியோட மானத்தை வாங்கிவிட்டியேடா!!” என கத்திக்கொண்டே அனுஷ்காவின் அண்ணன் திரையில் நுழையும் சமயம் இடைவேளை வந்து விடுகிறது.
ஓரமாய் பாவாடை கிழிந்ததற்காக ஆத்திரத்தில் கத்திய விஜய், குத்துப் பாடல்களில் பாவாடையே போடாமல் ஆடும் அனுஷ்காவை ஒன்றுமே சொல்லாதது பெண் ரசிகைகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
குத்துப் பாட்டு முடிந்தவுடன் விஜயின் முதுகில் கத்தியால் ஒரு குத்து விழுகிறது. திரும்பிப் பார்த்தால் தன்னுடன் ஒரு காலத்தில் கபடி விளையாடிய பஞ்சாப் அணியின் கேப்டனும், அனுஷ்காவின் அண்ணனும் நிற்கிறார்கள்.
தங்கள் குத்தவில்லையென்றும், இயக்குனர்தான் விஜய் செய்யும் அலும்பு தாங்காமல் குத்தச் சொன்னார் எனவும் அவர்கள் எவ்வளோ முறை கெஞ்சியும் விஜய் அவர்களை மன்னிக்காமல் ஊரே அதிரும்படி கர்ஜிக்கிறார். பின் குத்துப்பட்ட காயம் ஆறுவதற்குள் அனுஷ்காவை திருமணம் செய்து காட்டுவதாக சபதம் எடுக்கிறார் விஜய்.
பின்பாதி படத்தில் முதுகில் ரத்தம் சொட்டியபடியே மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். விஜய்யின் வேதனையை பொறுக்க முடியாத நண்பர் சத்யன், விஜய்யின் ரத்த காயத்தில் ‘M-Seal’ பூசி அடைக்க வரும் சமயத்தில், விஜய் அவரை தடுத்து, உழைப்பின் உன்னதத்தை பற்றி, நமீதாவுடன் ஒரு ரீமிக்ஸ் பாடல் பாடுகிறார்.
“ஏன்டா இவன் சம்பந்தமில்லாம பாடுறான்?” என்ற குழப்பத்தில் அழுதுகொண்டே சத்யன் வெளியேரும் போது நம் கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது. வில்லனின் சதியால்(??!!!) நண்பனை இழந்த ஆத்திரத்தில், தான் செய்த சபதம் கடைசி சீனில் நினைவுக்கு வர, வெறிகொண்ட வேங்கையென எதிரிகளை ‘வேட்டையாடப்’ புறப்படுகிறார் வேட்டைக்காரன் விஜய்.
வில்லனை வீழ்த்தினாரா?
பஞ்சாப் கேப்டன் அனுஷ்காவின் மேல் வைத்திருக்கும் ஒரு தலை காதல் என்ன ஆனது
?சபதத்தில் விஜய் ஜெயித்தாரா?
முதுகில் ரத்தம் நின்றதா?
சத்யன் என்ன ஆனார்?
ஆடியோ கேசட்டில் இருக்கும் இன்னும் ஒரு குத்துபாடல் எப்போது வரும்?போன்ற பல விஷயங்களுக்கு அழகாக விடை சொல்கிறது இந்த வேட்டைக்காரன்.
குடும்பத்துடன் பார்க்கக்கூடிய விஜயின் வித்தியாசமான படங்களின் வரிசையில், மற்றுமொரு வைரம்தான், இந்த வேட்டைக்காரன். வேட்டைக்காரன் வெல்வான்

நாளைய தீர்ப்பு முதல் வேட்டைக்காரன் வரை... இளைய தளபதி விஜய்















இதுவரை சினிமா பற்றி பதிவிடவில்லை. இனி சினிமாப் பதிவுகளும் அடிக்கடி போடுவோமே என்று ஒரு எண்ணம் வந்தது. சினிமா பற்றி எழுதினால் நிறைய ஹிட்ஸ் கிடைக்குமாம் என்று சொல்கிறார்களே என்று வேறொரு சினிமாத் தகவலை பதிவிட நினைத்தபோது ஏன் நம்ம இளைய தளபதியைப் பற்றியே எனது முதல் சினிமா இடுகையைப் போடுவோமே என்ற ஒரு எண்ணம் வந்தது.



22.06.1974 ல் பிறந்த விஜய் தனது சிறுவயதிலேயே தனது தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய பல படங்களிலே நடித்திருக்கின்றார். இவரது இயற் பெயர் ஜோசப் விஜய் சந்திரசேகர் என்பதாகும். ஏறத்தாள தனது பத்துப்படங்களுக்குப் பின்னர் தனது இடத்தினைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றார் என்று சொல்லலாம்


சிறு வயதிலே நடிக்கத் தொடங்கினாலும் நாளைய தீர்ப்பு எனும் திரைப்படத்திலே கதாநாயகனாக அறிமுகமாகினார். இன்று தனது 50 வது படத்தினை எட்டிப்பிடித்துக்கொண்டிருக்கின்றார். தனது தந்தை எஸ். ஏ. சந்திரசேகரின் இயக்கத்திலே பல திரைப்படங்களை நடித்திருக்கின்ற்றார்



இன்று அரசியலில் ஈடுபடுவது பற்றிப்பேசப்படுகின்றது அரசியலில் இறங்கினால் அவர் தற்போது வைத்திருக்கின்ற பல இரசிகர்களை இழப்பதோடு, அவர் சினிமாவிலே நிலைத்திருக்க முடியாத நிலையும் தோன்றலாம்.




அவர் 1992 நாளைய தீர்ப்பில் கதாநாயகனாக அறிமுகமானதில் இருந்து இன்றுவரை நடித்த திரைப்படங்களின் பட்டியலைப் பார்ப்போம்.
19992 - நாளைய தீர்ப்பு
துணை நடிகை - கீர்த்தனா
இயக்கம் -எஸ். ஏ. சந்திரசேகர்
1993 - செந்தூரப்பாண்டி
துணை நடிகை - யுவராணி
இயக்கம் -எஸ். ஏ. சந்திரசேகர்
1994 - ரசிகன்
துணை நடிகை - சங்கவி
இயக்கம் - எஸ். ஏ. சந்திரசேகர்
1994 - தேவா
துணை நடிகை - சுவாதி
இயக்கம் - எஸ். ஏ. சந்திரசேகர்
1995 - ராஜாவின் பார்வையிலே
துணை நடிகர், நடிகை - இந்திரஜா, அஜித்
இயக்கம் - ஜானகி சௌந்தர்
1995 - விஷ்ணு
துணை நடிகை - சங்கவி
இயக்கம் - எஸ்.ஏ.சந்திரசேகர்
1995 - சந்திரலேகா
துணை நடிகை, நடிகர் - வனிதா விஜய்குமார்
இயக்கம் - நம்பிராஜன்
1996 - கோயம்புத்தூர் மாப்ளே
துணை நடிகை - சங்கவி
இயக்கம் - சி. ரெங்கனாதன்
1996 - பூவே உனக்காக
துணை நடிகை -சங்கீதா, அஞ்சு அரவிந்த்
இயக்கம் - விக்ரமன்
1996 - வசந்த வாசல்
துணை நடிகை - சுவாதி
இயக்கம் - M. R. சசுதேவன்
1996 - மாண்புமிகு மாணவன்
துணை நடிகை - கீர்த்தனா
இயக்கம் - எஸ்.ஏ.சந்திரசேகர்
1996 - செல்வா
துணை நடிகை - சுவாதி
இயக்கம் - ஏ. வெங்கடேசன்
1997 - காலமெல்லாம் காத்திருப்பேன்
துணை நடிகை - டிம்ப்பல்
இயக்கம் - ஆர். சுந்தர்ராஜன்
1997 - லவ் டுடேது
ணை நடிகை - சுவலட்சுமி
இயக்கம் -பாலசேகரன்
1997 - ஒன்ஸ் மோர்
துணை நடிகை- சிம்ரன்
இயக்கம் - எஸ்.ஏ.சந்திரசேகர்
இத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் முக்கிய வேடமேற்று நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது


1997 - நேருக்கு நேர்
துணை நடிகர், நடிகை - சூர்யா, சிம்ரன், கௌசல்யா
இயக்கம் - வசந்த்
1997- காதலுக்கு மரியாதை
துணை நடிகை - சாலினி
இயக்கம் - பாசில்
1998 - நினைத்தேன் வந்தாய்
துணை நடிகைகள் - தேவயானி, ரம்பா
இயக்கம் - கே. செல்வபாரதி
1998 - பிரியமுடன்
துணை நடிகை - கௌசல்யா
இயக்கம் - வின்சென்ட் செல்வா
1998 - நிலாவே வா
துணை நடிகை - சுவலட்சுமி
இயக்கம் - ஏ. வெங்கடேசன்
1999 - துள்ளாத மனமும் துள்ளும்
துணை நடிகை - சிம்ரன்
இயக்கம் - S. எழில்
1999 - என்றென்றும் காதல்
துணை நடிகை - ரம்பா
இயக்கம் - மனோஜ்
1999 - நெஞ்சினிலே
துணை நடிகை -இசா கோபிகர்
இயக்கம் - எஸ்.ஏ.சந்திரசேகர்
1999 - மின்சாரக் கண்ணா
துணை நடிகை - ரம்பா
இயக்கம் - கே. எஸ். ரவிக்குமார்
2000 - கண்ணுக்குள் நிலவு
துணை நடிகை - சாலினி
இயக்கம் - பாசில்
2000 - குஷி
துணை நடிகைகள் - ஜோதிகா, சில்பா செட்டி
இயக்கம் - எஸ். ஜே. சூர்யா
2000 - பிரியமனவளே
துணை நடிகை - சிம்ரன்
இயக்கம் - கே. செல்வபாரதி
2001 - பிரெண்ட்ஸ்
துணை நடிகை, நடிகர் - தேவயானி ,சூர்யா
இயக்கம் - சித்திக்
2001 - பத்ரி
துணை நடிகைகள் - பூமிகா, மோனல்
இயக்கம் - அருண் பிரசாத்
2001 - ஷாஜகான்
துணை நடிகைகள் - ரிச்சா பல்லோடு, மீனா
இயக்கம் - ரவி
2002 - தமிழன்
துணை நடிகை - பிரியங்கா சோப்ரா
இயக்கம் - ஏ. மஜீத்
2002 - யூத்
துணை நடிகைகள் - சந்தியா, சிம்ரன்
இயக்கம் - வின்சென்ட்
2002 - பகவதி
துணை நடிகை - ரீமா சென்
இயக்கம் - ஏ. வெங்கடேஷ்
2003 - வசீகரா
துணை நடிகை - சினேகா
இயக்கம் - கே. செல்வபாரதி
2003 - புதிய கீதை
துணை நடிகைகள் - மீரா ஜாஸ்மின், அமிஷா பட்டேல்
இயக்கம் - கே. பி. ஜெகன்
2003 - திருமலை
துணை நடிகை - ஜோதிகா
இயக்கம் - ரமணா
2004 - உதயா
துணை நடிகை - சிம்ரன்
இயக்கம் - அழகம் பெருமாள்
2004 - கில்லி
துணை நடிகை - திரிஷா
இயக்கம் - தரணி
2004 - மதுர
துணை நடிகைகள் - சோனியா அகர்வால், ரக்ஷிதா, தேஜாஸ்ரீ
இயக்கம் - ஆர். மாதேஷ்
2005 - திருப்பாச்சி
துணை நடிகைகள் - திரிஷா, மல்லிகா
இயக்கம் - பேரரசு
2005 - சச்சின்
துணை நடிகைகள் - ஜெனிலியா, பிபாசா பாசு, Linda Arsenio
இயக்கம் - ஜான் மகேந்திரன்
2005 - சுக்கிரன்
துணை நடிகைகள் - ரவி கிருஷ்ணா, நடாஷா, ரம்பா
இயக்கம் - எஸ்.ஏ.சந்திரசேகர்
2005 - சிவகாசி
துணை நடிகைகள் - அசின், நயன்தாரா
இயக்கம் - பேரரசு
2006 - ஆதி
துணை நடிகை - திரிஷா
இயக்கம் - ரமணா
2007 - போக்கிரி
துணை நடிகைகள் - அசின், முமைத் கான்
இயக்கம் - பிரபு தேவா
2007 -அழகிய தமிழ் மகன்
துணை நடிகைகள் - சிரேயா, நமிதா
இயக்கம் -பரதன்
2008 - குருவி
துணை நடிகைகள் - திரிஷா
இயக்கம் - தரணி
2009 - வில்லு
துணை நடிகை - நயன்தாரா
இயக்கம் - பிரபு தேவா
2009 - வேட்டைக்காரன்






produced by:-
R*SANJEEBAN

Tuesday, November 10, 2009

யாழ்ப்பாணத்து நல்லூர் தவத்திரு ஆறுமுக நாவலரவர்கள்

"தமிழ் சைவம் இரண்டும் என் இரு கண்கள்; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்துப் பயன் கொள்வதே என் கடன்; அவை வாழப் பணி புரிவதே என் வாழ்வின் குறிக்கோள்", என வாழ்ந்தவர் தவத்திரு ஆறுமுக நாவலரவர்கள்.

அவர் ஸ்ரீலங்கா யாழ்ப்பாணம் நல்லூரில் கந்தருக்கும், சிவகாமிக்கும் 1822 டிசம்பர் 12ல் (சித்திரபானு மார்கழி 5) தோன்றியவர்.

அவர் தமிழ் இலக்கிய இலக்கணச் சித்தர்; சாத்திரங்கள், சிவாகமங்கள் கற்றவர்; ஆங்கிலத்திலும் ஸமஸ்கிருதத்திலும் வல்லவர்; சிவனடியை மறவாத சிந்தனையாளர்; உரைநடை கைவந்த வல்லாளர்; நல்லாசிரியர்; நூலாசிரியர்; உரையாசிரியர்; பதிப்பாசிரியர்; சொல்லின் செல்வர்; தனக்கென வாழாத் தகைமையாளர்; தவக்கோலச்சீலர்; இல்லறம் ஏற்காது நற்பணி செய்தவர்.

அவர் இயற்றிய நூல்கள்: 23; உரை செய்தவை: 8; பரிசோதித்துப் பதிப்பித்தவை: 39; யாத்த பாடல்கள்: 14.

விவிலிய நூலுக்குச் சிறந்த மொழிப்பெயர்ப்பு செய்தது, திருக்குறள் பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தது, பெரிய புராண வசனம் எழுதியது அவருடைய பெருமைக்குச் சான்றுபகர்வன. அவர் இயற்றிய சைவ வினா விடை, பாலபாடம் இன்றும் போற்றப் படுபவையாகும்

யாழ்ப்பாணத்திலும், சிதம்பரத்தில் மேலவீதியில், சைவப்பிரகாச வித்தியாசாலை (1864) (தற்போது மேல்நிலைப்பள்ளி) சென்னையில் வித்தியானுபாலன அச்சியந்திர சாலை (1860) ஆகியவற்றை நிறுவியவர். சிதம்பரம் ஞானப்பிரகாசர் திருக்குளம் வடகரையில், அவருடைய விருப்பப்படி, சேக்கிழார் கோயில் நிறுவப்பட்டது (1890).

திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அவர்களால் 'நாவலர்' பட்டம் பெற்றவர் (1865).

அவருடைய சமகாலச் சான்றோர்களில் சிலர் யாழ்ப்பாணத்தில் சங்கரபண்டிதர், சிவசம்புப் புலவர், ராவ்பகதூர் சி.வை.தாமோதரம் பிள்ளை, விஸ்வநாதப் பிள்ளை, பர்சிவல்துரை; தமிழ்நாட்டில், சிதம்பரம் வடலூர் இராமலிங்க அடிகளார், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மகாலிங்க அய்யர், இராமநாதபுரம் பொன்னுசாமிதேவர், அவருடைய மாணக்கர்களில் சிலர்: சதாசிவம் பிள்ளை (முதல் மாணாக்கர்), பொன்னம்பலம்பிள்ளை, செந்தில்நாத அய்யர், கைலாசப்பிள்ளை.

1879 டிசம்பர் 5ல் (பிரமாதி கார்த்திகை 21 மகம்) சிவப்பேறு பெற்றார்.

"தமிழ்க்குலம் உலகப்புகழ் எய்தத் தாழாதுஞற்றுங்கள் அ?தொன்றே எனக்குத் தமிழர் செய்யும் கைம்மாறு". - ஆறுமுக நாவலர்.

நன்றி:www.geocities.com/shivaperumant and www.geocities.com/shivaperuman

Monday, November 9, 2009

திருவள்ளுவரின் திருநெறி மேன்மைமிகு சைவநீதி

"புலவர் திருவள் ளுவர் அன்றிப் பூமேல்
சிலவர் புலவர் எனச் செப்பல் - -நிலவ
பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றும்
கறங்குஇருள்மா லைக்கும் பெயர்" - மதுரைத் தமிழாசிரியர்
செங்குன்றூர் கிழார்

"Tirukkural is the life, Tiruvasagam is the heart, and Tirumandiram is the soul of Tamil culture..." - Swami Shivanada -On the Tirukkural நம் செந்தமிழ்ச் சைவ நூலாகவும் உலகப் பொதுநூலாகவும் விளங்கும் திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் மூன்றாம் இடத்தில் உள்ள மேன்மையைக் கொண்டது















தமிழ்மறை,பொதுமறை,பொய்யாமொழி,வாயுறை வாழ்த்து, தெய்வ நூல்,முப்பால் நூல், உத்தர வேதம் என்று பலவாறு அழைக்கப்படும் திருக்குறளை சமணநூல் என சிலர் சொல்வார்கள். நாத்தீகவாத அரசியலின் ஆற்றாமையில் உருவாகிய கதையே இது. இன்று ஒருசில கிருஷ்தவ போதகர்கள் திருவள்ளுவர் தொட்டு ஔவையார்வரை கிருஷ்தவர் என்றும் சைவ சித்தாந்த நூல்கள் யாவும் ஆதிக் கிருஷ்தவத்துள் ஆரியம் கலந்ததால் விளைந்தவை என்றும் கதைகட்டித் திரிகின்றார்கள். பணபலம் கொண்ட இவர்கள் நாத்தீகவாதப் பீடங்களை தமக்கு தலையசைக்க வைத்துமுள்ளனர். எனவே இத்தருணத்தில் திருக்குறள் சித்தாந்த சைவநூலே என்பதை தெளியவைக்க வேண்டியது காலக்கடமை!

"அணுவைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்" என்கிறார் ஔவையார்.

"வள்ளுவர்செய் திருக்குறளை
மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி
ஒருகுலத்துக் கொருநீதி " என்கிறார் மனோன்மணியம்



நாத்தீகவாத அரசியல்வாதிகள், திருக்குறளுக்கு ஏற்பட்ட மதிப்பை உணர்ந்து, திருக்குறளை எதிர்க்க முடியாது போகவே சமண சமயநூல் என புரளியைப் பரவவிட்டு அரசியல்மேடைகளில் அப்புரளியை அடிக்கடி ஆயிரம் தடவைகள் உண்மையென கூவி தமது ஆற்றாமையை சோற்றுக்குள் மறைத்த முழுப்பூசணிக்காயாக்கிவிட்டனர். திருக்குறளை ஆரியக் கருத்துக் கொண்ட நூல் என்றும் பகுத்தறிவுபற்றிக் கவலைப்படாமல் எழுதிய நூல் என்றும் பெரியார் எனப்படும் ஈ.வே.ராமசாமியார் தனது குடியரசு இதழில் குறிப்பிட்டுள்ளமையை அறியக்கூடியதாகவுள்ளது
‘‘அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும், மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும், மூட நம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பரக்கக் காணலாம்" -20.01.1929 குடியரசு இதழ்.ஆனாலும் பின்னர் திருக்குறளின் மகத்துவத்தை உணர்ந்த நாத்தீகவாத பெரியாரிசத்தால் அதை சைவநூல் என்பதை ஏற்றுக்கொள்ளும் திறனில்லாது போய்விடவே, சமண நூல் என்பதுபோலவும், பொதுநூல் ஆதலால் கிருஷ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் எதிராக எதுவுமே இந்நூலில் இல்லை என்றும் இது இந்துமதக் கண்டன நூல் என்றும் கதைகட்டி விட்டனர்.
14.03.1948, மூன்றாவது திருவள்ளுவர் மாநாட்டில் ‘‘(திருக்குறளில்) எத்தகைய பகுத்தறிவுக்கு புறம்பான ஆபாசக் கருத்துக்களுக்கும் அதில் இடமில்லை" என்றும் ‘‘திருக்குறள் ஆரிய தர்மத்தை - மனு தர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதை நீங்கள் உணர வேண்டும்" என்றும் பெரியார் கூறியுள்ளார்.

23,24.10.1948 திராவிடர் கழக 19-வது மாநாட்டில், ‘‘குறள் ஹிந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வ மதத்திலுள்ள சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும்" "குறளை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்பட யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். நீங்களும் (கிறிஸ்தவர்கள்) குறள் மதக்காரர்கள். பைபிளுக்கு விரோதமாகக் குறளில் ஒன்றும் கிடையாது" என்றும் பெரியார் கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் திருக்குறளை எதிர்த்த பெரியார் பின்னர் திருக்குறளை கிருஷ்தவர்க்கும் இஸ்லாமியருக்கும் ஏற்றநூல் என்றும் ஆரிய எதிர்ப்பு நூல் என்றும் தனது கருத்தை மாற்றியமை திருக்குறள் உள்ளவரை வேதநெறியை எதிர்க்கமுடியாது என்று உணர்ந்தமையை புலனாக்கிறது. இந்துமதம் என்பதும் இந்துத்துவா என்பதுவும் அழகுத் திருநெறிச் சைவத்துக்கு நன்மையை ஊட்டாதவை என்பதை ஏலவே பல கட்டுரைகளில் சுட்டிக்காட்டியுள்ளேன். இந்துமதம் என்னும் பெயரில் இன்று அறிமுகப்படுத்தப்படுகின்ற ஸ்மார்த்தம் வேறு. தென்னாட்டுச் சைவநெறி வேறு. இந்த வேறுபாடுகளை உணரக்கூடிய தெளிவு பெரியாரிடம் இருந்திருக்க வாய்ப்பில்லை. தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த மறைமலையடிகள் தொட்டு, தனித் தமிழ் இயக்கத்துக்காய் உழைத்தவர்கள் சைவச் சான்றோர்களே என்ற உண்மையை புரிந்துகொள்ளும் ஆற்றல் பெரியாரிடத்தில் இருக்கவில்லை. தமிழரிடம் இலக்கியம் எதுவுமே இல்லை என்ற மனநிலையில் இருந்த பெரியாருக்கு இந்த அருமையை உணர முடியாமல் போனதில் வியப்பெதுவும் இல்லை. ஆனால் அரசியல் பலத்துடன் இருந்த நாத்தீகவாதம் தனது ஆற்றாமையில் உருவாக்கிய "சமணநூல்" என்னும் பதத்தை அற்புதமாக தமிழரிடம் பரவச்செய்திட்டு!

இஸ்லாமியர் திருக்குரானுக்கு இணையாக கருதும் திறன் திருக்குறளுக்கு இல்லை எனவும் பொதுமறையாகக் கருதமுடியாது எனவும் வெளிப்படுத்தியுள்ளனர். இதுபற்றி பெரியார் எந்தவித கருத்தையும் வெளியிடவில்லை. கிருஷ்தவரில் திருவிவிலியத்தை ஆழமாய் நம்புகிறவர்கள் மறுத்துவிட்டனர். பொதுமறையாகக்கூட ஏற்கவில்லை.எனினும் கிருஷ்தவ மதத்தை ஒழுகும் தமிழ் இலக்கியப் பற்றாளர்கள் திருக்குறளை பொதுமறை என்பர். ஆனால் சில் விசமப் பிரச்சாரத் தரகுக்கூட்டத்தார் கிருஷ்துவின் அருளால் திருவள்ளுவர் எழுதிய நூல் என்று பிதற்றுகின்றனர்.ஆக; சைவரின்மேல் மட்டும் பெரியாரிசம் திணித்த ஒன்றே திருக்குறள் சைவநூல் அல்ல என்க.

திருக்குறளை சொந்தம் கொண்டாடினால் தமிழில் நிலைத்திருக்கலாம் என கனவுகாணும் கிருஷ்வ விசமிகள் சிலர், தோமஸிடம் அருள்பெற்று வள்ளுவர் எழுதிய நூல் என்று நகைச்சுவை நாடகத்தை தமிழகத்தில் அரங்கேற்றியவண்ணம் உள்ளனர். தோமஸ் என்பவர் தமிழகத்துக்கு வந்தார் என்பதை கத்தோலிக்கபீடம் ஏற்கவில்லை. ஏனெனில் ஆதாரம் ஏதுமில்லை. தோமஸ் தமிழகத்துக்கு வந்தார் என்றும் அவர் திருவள்ளுவருக்கு போதித்தார் என்றும் கதையைக்கட்டிவிட்டனர் ஆங்கிலேய காலத்தில் தமிழ்கற்று கிருஷ்தவம் பரப்பிய பாதிரிகள். வரலாற்றுரீதியில் வராத ஒருவருக்கு வந்ததாக வைத்து படம்கூட எடுக்க இருந்தமையும் அதுபற்றிய விழாவில் கருணாநிதி தமிழக முதலமைச்சர் பதவியோடு பங்குபற்றி அவ்விழாவுக்கு அங்கீகாரம் அளித்தமையும் வெட்கக்கேடு! வராத ஒருவரை வந்தார் என நம்புவதுக்குப் பெயர்தான் மூடநம்பிக்கை! கருணாநிதியும் மூடநம்பிக்கைகளை விரட்ட முனைகிற கழகங்களும் இந்த மூடநம்பிக்கையை நம்புவது அவர்களது கொள்கையின் இழிநிலை என்க. இதற்கு கருணையில்லாத நிதியாகிய கருணாநிதி விலைபோனதில் வியப்பில்லை.










ஜீ.யூ.போப் தனது திருவாசக மொழிபெயர்ப்பு முன்னுரையில் சேர்ச்சில் மாணிக்கவாசகர் தன்னுடன் நிற்பதுபோலவும் முழந்தாளிட்டு வழிபடுவது போலவும் யேசுநாதரின் அடிச்சுவட்டைக் கண்டு மாணிக்கவாசகர் பின்பற்றியிருப்பார் என்றும் இல்லாவிட்டால் அவருக்கு எவ்வண்ணம் இத்தகு உருக்கம் இருக்கமுடியும் என்றும் அத்துடன் இவருடன் மயிலாப்பூரில் வாழ்ந்த நெசவாளி(திருவள்ளுவர்)யும் நாலடியார் இயற்றிய நாடோடிஞானிகள் ஆகியோர் யேசுநாதரின் சரிதத்தை அறிந்துதான் இருப்பார்கள் என்றும் குறிப்பிடுகின்றார். அதாவது கிருஷ்தவாசத்தாலேயே மெய்யுணர்வு பெற்றதாக சுட்டுகிறார். தமிழின் சிகரங்களாகவுள்ள திருவாசகம், திருக்குறள் மற்றும் நாலடியார் என யாவற்றையும் கிருஷ்தவ தொடர்பின் விளைவு என்று ஜீ.யூ.போப் சொல்லியது "திருவாசகமும் திருக்குறளும் "சைவநெறியோடு பிணைந்துள்ளவரை கிருஷ்தவத்தை முழுமையாகப் பரப்ப முடியாது என்பதை உணர்ந்தே!

திருக்குறளை சைவநெறியில் இருந்து பிரித்து சமணநூல் என்று ஆரம்பத்தில் கதைபரப்ப பெரியாருக்கு உழைத்தது இக்கிருஷ்தவ விசம தரகுக்கூட்டம் எனலாம்.இரண்டாவதாக இப்போது வந்திராத தோமஸுடன் திருவள்ளுவருக்கு உறவுப்பாலத்தை ஊட்டுகின்றது தனது பணபலம் கொண்டு!

பெரியார் "திருக்குறளின் முதலாவது அதிகாரமாகிய கடவுள் வாழ்த்து என்பதை மாற்றி மனித இனத்தின் குறிக்கோள் என்று அதற்குத் தலைப்புத் தரவேண்டும்" என்று வேண்டியதாக க.அப்பாத்துரையார் குறிப்பிட்டுள்ளமை கடவுள் வாழ்த்தை ஏற்றுக் கொள்ளமுடியாத மனநிலையில் பெரியார் இருந்துள்ளார் என்பதைப் புலனாகின்றது.ஆரியர் இடையில் கலப்படம் செய்துவிட்டனர் என்று கதறுகின்ற பெரியார்வாதிகள் பெரியார் செய்யமுயன்ற கலப்படத்தை என்னவென்று சொல்வார்கள்? இன்னொருவரிடம் இவ்வண்ணம் வேண்டியவர் "தனது கொள்கைக்காக எவ்வளவு கலப்படம் செய்து பொருளை திரிவுபடுத்தி பேசியிருப்பார், எழுதியிருப்பார்" என்பதையும் உய்த்துணரலாம்.

பாரதிதாசன், சைவ சித்தாந்தத்தைப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு படித்தால், திருவள்ளுவருடைய கருத்துக்குப் போகலாம் "என்று குறிப்பிட்டார் என க.அப்பாத்துரையார் குறிப்பிடுகின்றார். இதிலிருந்து பாரதிதாசனும் சைவ சித்தாந்த நூலே திருக்குறள் என்று ஒப்புக்கொண்டமையை உணரமுடிகின்றது.

"அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்று அறிக அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் - அம்மையப்பர் எல்லா உலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும் அல்லார்போல் நிற்பார் அவர்" என்பது திருக்களிற்றுப்படியாரில் (சைவ சித்தாந்த சாத்திர நூல்) கடவுள் வாழ்த்து பாடலாகும். உமையம்மை உடனாய அப்பனாகிய சிவமே உலகத்தாருக்கு அம்மையப்பர். அம்மையப்பராக வந்தே துணை செய்வர். எல்லா உலகத்துக்கும் அப்பாலும் இவ்வுலகில் இல்லாததுபோலும் தோன்றுவர். "ஆதி பகவன் முதற்றே உலகு" என வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் ஏலவே இதே சைவ சித்தாந்த கருத்தை முன்வைத்துள்ளார். ஆனால் நாத்தீகவாதபீடங்கள் பகவன் என்பது சமணச் சொல் என்றும் தனது அம்மாவாகிய ஆதியையும் தனது அப்பாவாகிய பகவனையும் பாடுகின்றார் என்றும் பிதற்றுவர்.

உலகப் பொதுமறையை இயற்ற விளைந்தவர் தனது சொந்த தாயையும் தந்தையையும் கடவுள் வாழ்த்தில் சுட்டுவார் என்பது எவ்வளவு அறியாமை! கடவுள் வாழ்த்தில் தமிழிலக்கியங்களில் எந்தவொரு ஆசிரியரும் இவ்வண்ணம் சுட்டியது இல்லை. ஆனால் திருவள்ளுவர் வழமைக்கு மாறாக உலகப் பொதுமறையாக இயற்றுகின்ற நூலில் சுட்டினார் என்பது நாத்தீகவாத கதைகட்டலில் ஏற்பட்ட பெரிய ஓட்டை என்க.

அந்நிய பண்பாட்டுச் சொற்கள் ஏராளமாக இன்று தமிழுக்குள் வாழுவது கண்கூடு. பகவன் எனும் சொல் சமணத்துடன் தொடர்பானதாயின் அது சமண நூல் ஆகிவிடுமா என்ன? இன்று வேதம்,வேதாகமம்,வீபூதித் திருநாள் என்பன கிருஷ்தவத்துள் புழக்கத்தில் இருப்பது கண்கூடு! சமண சமய அறிமுகத்தால் தமிழில் அச்சொல் புழக்கத்தில் இருந்தமையால் வள்ளுவர் பயன்படுத்தியிருக்க வாய்ப்புண்டல்லவா? ஏனெனில் சமணநூலே திருக்குறள் என்பதற்கு எந்தவித சிந்தனையும் இன்றி இதையே சுட்டுகின்றனர்.

திருக்குறளுக்கு சமண நூல் எனும் மாயை சூட்டியவர்கள் மறுபிறப்புக் கொள்கையை மறந்துபோனது ஏனென்று விளங்கவே இல்லை. எண் குணத்தான் என கடவுளை திருக்குறள் கூறுகின்றது. நக்கீரர்,ஔவையார்,இடைக்காடர் எனப் பல சைவப் புலவர்களால் போற்றி புகழப்பட்ட நூலே திருக்குறள். சமண, பௌத்தப் புலவர்கள் திருவள்ளுவரையோ அன்றி திருக்குறளையோ போற்றிப் புகழ்ந்ததாக இட்டுக்கட்டிக்கூட காட்டமுடியாது.

அறம்,பொருள்,இன்பம்,வீடு எனும் கோட்பாட்டில் முதல் மூன்றையும் விளக்கியுள்ளார் வள்ளுவர், எல்லா சமண நூல்களும் காமத்தை துறந்து துறவை நாடுவதில் முடிகின்றன.திருக்குறள் காமத்துப்பாலுடன் அல்லவா முடிகின்றது! வீடு பேற்றை விளக்கினால் சமய பொதுத்தன்மைக்கு இடைஞ்சல் ஆகிவிடும் என கருதியிருக்க வாய்ப்புண்டு.ஆனால் சைவ சித்தாந்தக் கருத்துகளை தவிர்க்காமல் எழுதமுடியவில்லை. சைவத்தை திணிக்கும் எண்ணம் சைவரிடம் இருந்ததில்லை. இதனாலேயே இந்தோனேசியாவிலும் கிழக்காசிய நாடுகளிலும் சைவம் தழைக்கவில்லை. பொதுநூலாக எழுத வெளிக்கிட்டபிறகு சிவன் எனும் பெயரை தவிர்த்திருப்பார் வள்ளுவர்.

சமணத்தின் உட்பிரிவுகள், பௌத்தத்தின் உட்பிரிவுகள் எவற்றோடும் திருக்குறளுக்கு சம்பந்தம் இல்லை என்பதையும் திருவள்ளுவர் சித்தாந்த சைவர் எனப்தையும் திருவாவடுதுறை ஆதீனம் தெளிவாக விளக்கியிருந்தும் அரசியல் பலம், பணபலமாகியன அற்றதனால் மக்களை சென்றடையாமல் அக்கருத்துகள் உள்ளன.

"தேருங்கால் உன்னை ஒழிய உறவு இல்லை என்னும் அது தன்னை அறிவைத் தனிஅறிவை - முன்னம் தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை அவர் என்று - நிலைத் தமிழின் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்த மெய் வைத்த சொல்லை விரும்பாமல் - ஐவர்க்கும் ஆவதுவே செய்து அங்கு அவர்வழியைத் தப்பாமல் பாவம் எனும் பௌவப் பரப்பு அழுந்திப்"

ஆராய்ந்து பார்க்கும்போது கடவுளாகிய உன்னைத்தவிர எனக்கு யாரும் உறவில்லை என்னும் கருத்தை, பசு ஞானம் எனப்படும் ஆன்மாவின் அறிவையும், பதி ஞானம் எனப்படும் பரம்பொருளின் மேலான மெய்யறிவையும் முன்பு எய்தியவர்கள் கூறினர்.இவ்வுடலையும் இவ்வுலக வாழ்வையும் முற்றாகத் துறந்தவர்களான அவர்கள் கூறிய இத்தகைய உண்மைகளை உணராதவர், மயங்கி மாயைகளின் வலையில் பட்டவர் என்று கூறிய தெய்வப் புலமைத் திருவள்ளுவரின் மெய்யான கருத்தையும் அறிந்து கொள்ள விரும்பாமல், ஐந்து புலன்களுக்கு விருப்பமானதையே செய்து, அவை காட்டும் வழியில் மட்டும் தவறாது நடந்து பாவக்கடலில் மூழ்கி வருந்துவார் என சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் ஒன்றாகப் போற்றப்படும் நெஞ்சுவிடு தூதுவில் உமாபதி சிவாச்சாரியார் திருவள்ளுவரையும் "தலைப்பட்டார் தீரத்து றந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்" என்னும் குறளையும் பயன்படுத்தி திருக்குறளை சைவநெறியுடன் சமபந்தஞ் செய்துள்ளார்.

சைவ சித்தாந்த சாத்திர நூல்களின் ஒன்றாகிய
திருக்களிற்றுப்படியாரில்;

"அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பறிப்பீனும் விந்து"

"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்" என்னும் குறள்களை;

"வேண்டும்கால் வேண்டும் பிறவாமை என்றமையால்
வேண்டின் அஃது ஒன்றுமே வேண்டுவது - வேண்டினது
வேண்டாமை வேண்ட வரும் என்றமையால்
வேண்டிடுக வேண்டாமை வேண்டும் அவன்பால்"

என்னும் பாடலில் மேற்கோள்களாக காட்டப்பட்டிருப்பதும் திருக்குறள் சைவ சித்தாந்த நூலே என்பதை எளிதாகப் புலனாக்கின்றது.

"சாவிபோம் மற்றைச் சமயங்கள் புக்குநின்று
ஆவி அறாதே என்று உந்தீபற
அவ்வுரை கேளாதே உந்தீபற"என்கிறது சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் ஒன்றாகிய திருவுந்தியார். உள்ளீடு இல்லாத பிறசமயங்களில் சென்று ஆவியை இழந்து மீண்டும் பிறப்பை ஏற்கக்கூடாது. அவற்றின் உரைகளைக் கேட்டுக் காலம் கடத்தல் கூடாது என்கின்றது. எனவே உள்ளீடு இல்லாத சமயங்களின் உரைகளை அச்சமயங்களின் நூல்களை படித்து கேட்டு காலத்தை வீணாக்குவது தவறு என்கின்ற சைவ சித்தாந்த மரபில் திருக்குறளை எடுத்துக்காட்டுகளாக நேரடியாக பயன்படுத்தியிருப்பதில் இருந்து திருக்குறள் சமணநூல் அல்ல என்பதும் சைவநூலே என்பதும் தெளிவாகிறது.


















"நீறில்லா நெற்றி பாழ்" என்றும் "சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை" என்றும் உரைக்கின்ற நல்வழி நூலின் கடைசிப் பாடலாக ஔவையார்,
"தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகம் என்று உணர்" என்கிறார்.

திருவள்ளுவரின் திருக்குறளும் உயர்ந்த நான்கு வேதங்கள் உணர்த்தும் முடிவான பொருளும், தேவார முதலிகளாகிய திருஞான சம்பந்தர்,சுந்தர மூர்த்தி நாயனார், அப்பர் பெருமான் ஆகியோரின் தேவாரங்களும் மாணிக்கவாசகப் பெருமான் பாடியருளிய திருவாசகமும் திருக்கோவையாரும் திருமூலநாயனாரின் தமிழாகமம் எனப்படும் திருமந்திரமும் ஒரே பொருளை உணர்த்தும் நூல்கள் என உணர்வாயாக" என்று பாடுகின்றார்.

அதாவது திருநெறிச் சைவ சித்தாந்தந்த தோத்திர நூல்களான தேவாரங்கள், திருவாசகம், திருக்கோவையார்,திருமந்திரம் போன்றவற்றுடன் திருக்குறளையும் இணைத்து ஔவையார் சுட்டுவது, அவருக்கு ஏலவே இருந்திருந்த "முற்காலம்" உணருகின்ற யோகசித்தியையே காட்டுகின்றது எனலாம்.

"உணர்வாயாக" என்று ஔவையார் யாரையோ சுட்டிச் சொல்வது போல் உள்ளமையை இங்கு கவனிப்பீர்களானால் அது யாரை என்பது தெளிவாகப் புலனாகும். நாத்தீக அரசியலில் திருக்குறளை சைவநூல் அல்ல என்று கூசாது பொய்யுரைத்த பெரியார் தொட்டு அவரது பிள்ளைகள் என துடிக்கின்ற கருணையில்லா நிதி மற்றும் வீரமணி அடங்கலாக மதம்பரப்புதல் என்ற ஒரே குறிக்கோளுக்காய் தமது மதத்தையே விற்கத் துணிந்த ஒருசில கிருஷ்தவ விசமிகள் வரைக்கும் உள்ள அறிவற்ற அரசியல் மதபோதை பிடித்தவர்களுக்கே என்க

சைவ சித்தாந்த புறச் சந்தான குரவர்களுக்கும் சரி, ஔவையாருக்கும் சரி, மற்றும் ஏனைய புலவர் பெருமக்களுக்கும் சரி, திருக்குறள் சமணநூல் என்றால் அதை சைவநூலாக்க வேண்டிய தேவை இருந்திருக்கவில்லை. அதேவேளையில் அத்தகைய இழிவான பண்பாடு அன்றைய தமிழ்ப் புலவர்களிடம் இருந்திருக்கவில்லை. பெரியாரின் வழியில் உருவாகிய அரசியல் பண்பாடே இத்தகு இழிநிலையை தமிழில் அறிமுகப்படுத்தியது.சில கிருஷ்தவ தரகர்கள் தொடருகின்றனர்.

"ஓதுசம யங்கள்பொருள் உணரு நூல்கள்
ஒன்றோடுஒன்று ஒவ்வாமல் உளபலவும் - இவற்றுள்
யாதுசம யம்பொருள்நூல் யாதிங்கு என்னின் இதுவாகும்
அதுஅல்லது எனும்பிணக்கம் இன்றி நீதியினால்
இவைஎல்லாம் ஓரிடத்தே காண நின்றதுயாதொருசமயம்
அதுசமயம் பொருள்நூல் ஆதலினான் இவைஎல்லாம்
அருமறைஆ கமத்தே அடங்கியிடும்
இவைஇரண்டும் அரனடிக்கீழ் அடங்கும்"

உலகில் உள்ள சமயங்களும் அவற்றின் கொள்கைகளை விளக்கும் நூல்களும் தமக்குள் முரண்பட்டனவாக உள்ளன. இவற்றுள் சிறந்த சமயம் எது? சிறந்த நூல் எது? என வினவினால், விடையாக இது அது ஆகும் அது இது ஆகும் என்று குழம்பாமல், எல்லாக் கொள்கைகளும் உரியமுறையில் உரிய இடத்தில் இருப்பதைக் கூறுவதே சரியானதாகும்.அவ்வாறான சமயம் சிறப்பான சமயம்.அத்தகு நூல் சிறப்பு வாய்ந்த நூல்.எனவே இத்தகைய சைவ சமயக் கொள்கைகளே அரிய வேதத்திலும் ஆகமங்களிலும் அடக்கம்.இவை இரண்டும் இறைவன் திருவடிகளை விளக்கி அங்கு அடங்கும். சித்தாந்த சாத்திர நூல்களில் ஒன்றாகிய சிவஞானசித்தியார் அழகாக அருமையாக உலகில் உள்ள எல்லா சமயங்களின் கருத்தையும் தன்னகத்தே கொண்ட ஒருநெறி எனின் அது சைவநெறி என விளக்கியுள்ளார். எனவே இத்தகு நெறியில் பூக்கும் எந்த நூலிலும் பிறசமயத்தவர் தமது சமயக் கருத்துகளை மட்டும் சுட்டிக்காட்டி, தமது சமயக் கருத்தைக் கொண்ட நூல் என வாதிட இடமுண்டு. தற்போது இது கண்கண்ட காட்சி! கிருஷ்தவ விவிலியக் கல்லூரிகள் தொட்டு கிருஷ்தவ பள்ளிவரை தமிழகத்தில் திருக்குறள், சைவ சித்தாந்த நூல்கள்,நாலடியார், ஆத்திசூடி என்பன கிருஷ்துவின் அருளைப் பெற்று எழுதிய நூல்கள் என நச்சுக் கருத்தை விதைக்கின்றனர். ஜீ.யூ.போப் ஏலவே திருவாசகத்தை கிருஷ்துவின் அருளையுணர்ந்து எழுதிய நூலென சுட்டியுள்ளார். இவற்றுக்கெல்லாம் சைவ நூல்கள் பொதுநூல்களாக விளங்கும் உன்னத உயர்ந்த தன்மையே காரணம்.

எனவே உலகப் பொதுமறையாக சைவநெறி வழங்கிய திருக்குறளை எளிதாக இந்த விசமிகள் திரிவுபடுத்தி சமணநூல், பௌத்த நூல், கிருஷ்தவ நூலென எளிதாக கதைபரப்பக் கூடியதாகவுள்ளது. சமண, பௌத்த,கிருஷ்தவத்தவர்களுக்கு உலகில் உள்ள எல்லா சமயங்களையும் சமயங்கள் என ஏற்கின்ற உணர்வுநிலை இருந்தமைக்கான அல்லது இருக்கின்றமைக்கான சான்றுகள் எதுவும் இல்லை. எனவே இத்தகு சமய உணர்வுடன் நூல்யாக்க முனைபவர் நேரடியாகவே தமது சமயநிலையை உயர்த்தி எழுதியிருப்பர். ஆனால் திருவள்ளுவர் பெருமானார் சைவநெறி ஒழுகி,அதன் பயனாக உலகுக்கு பொதுமறையாக நூல்யாக்க விளைந்து யாத்தநூலே திருக்குறள் என்பது திண்ணம்.

சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் கூட சைவநெறியைச் சார்ந்தவரே என்ற கருத்து வலிமைபெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்ற சமயசார்பற்ற தன்மை கொண்டு இதை உறுதிசெய்வர். தமிழ் தாத்தாவும் இதனை ஒப்புக் கொண்டுள்ளமையை அறியக்கூடியதாகவுள்ளது. எனவே சமயசார்பற்ற இலக்கியங்கள் படைப்பதற்கு சைவநெறி வாழ்வே பக்குவத்தை வழங்கியுள்ளதை உய்த்துணரலாம்.

இன்று மதசார்பற்ற நாடக இந்தியா விளங்குகின்றதெனில், நாத்தீகம் பேசி;வேதநெறி,சைவ நெறி என்பவற்றை உணராது அரசியலுக்காய் எள்ளி நகையாடுகின்ற கருணையில்லா நிதி அரியணையை மீண்டும் மீண்டும் சுகிக்க ஏதுவாயிருப்பதும் சமயசகிப்புணர்வுச் சால்பை சைவப் பெருமக்களும் வேதப் பண்பாட்டு மக்களும் பெற்றுள்ள ஒரேயொரு காரணத்தால் என்பது வெள்ளிடைமலை!

"தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
ஆனா அறமுதலா அந் நான்கும் - ஏனோருக்(கு)
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழிஉலகு என் ஆற்று மற்று"
- நக்கீரனார்

புளுகு பலநாளுக்கு தாக்குப்பிடிக்காது என்பர். எத்தனை காலத்துக்கு நாத்தீவ வாதப் புளுகுகள் தாக்குப்பிடிக்கின்றது என்று பார்ப்போம்!!!!!!

குறிப்பு:- திருக்குறள் ஏனைய சமயங்களுக்கு ஒவ்வாத கருத்துகளைக் கொண்டது என்பதையும் சைவ சித்தாந்த நூலே என்பதையும் திருக்குறளை ஆராய்வுசெய்து வாலையானந்த அடிகள் 1926- 27களில் வெளிவந்த செந்தமிழ்ச் செல்வி பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தொகுத்து நூலாக வெளியிட்டிருந்த திருவள்ளுவர் சித்தாந்த சைவர் என்னும் நூல் மெய்கண்டதேவரின் குருபூசையன்று மறுபதிப்பாக வெளியிடப்பட்டிருந்தது. இந்நூலை இணையத்தில் திருவாவடுதுறை ஆதீனப் புலவர் தமது இணைய முகவரியில் ஏற்றியிருந்தார். எனினும் இன்று யாகூ தற்காலிகமாக தமது இலவச சேவையை நிறுத்திக் கொண்டதனால் அவ்விணைய முகவரி செயலிழந்துவிட்டது. எனினும் பிரிதொரு இணையவசதியூடாக ஆறுமுகநாவலர் என்னும் பெயரில் அன்பர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.குறித்த வலைத்தளத்திற்கு சென்று இந்நூலைப் படித்துப் பயனடையலாம். திருவள்ளுவர் சித்தாந்த சைவர் நன்றி.

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்"

"தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"

Posted by சிவத்தமிழோன்
http://sivathamiloan.blogspot.com/2009/11/blog-post.html


திரட்டிகள்












Sunday, November 8, 2009

ஆதவன் பாடல்கள்


உங்களின் கருத்துக்களை குறிப்பிட வேண்டிய(comments) இடத்தில் குறிப்பிடுங்கள்.