அழுதுவடியும் அம்மா கேரக்டரா? கூப்பிடு சரண்யாவை... என்று கிளிசரின் போட வைத்தே அவரது கண்களை சிவக்க வைத்துவிட்டது கோடம்பாக்கம்.
இந்தக் கண்ணீர் கடலில் இருந்து தப்பிக்க நினைத்தவருக்கு துருப்புச் சீட்டாக கிடைத்திருக்கிறது குரு சிஷ்யன். இந்தப் படத்தில் கடலோரக் கவிதைகள் படத்தில் இடம்பெற்ற, அடி ஆத்தாடி மனம் றெக்க கட்டி பறக்குது பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். பாடலுக்கு ஆடியிருப்பவர் சரண்யா. உடன் சத்யராஜும் உண்டு. ஹீரோக்களுக்கு இணையாக இந்தப் படத்தில் காமெடி செய்திருக்கிறாராம் சரண்யா. அழுதுவடியாத கேரக்டர் கிடைத்ததே அதுவே பெரிய விஷயம் என்கிறார் பெருமூச்சுடன். கிளிசரின் தயாரிப்பாளர்கள் இவரைப் போன்றவர்கள் மீது கொஞ்சம் கருணை காட்டினால் புண்ணியமாகப் போகும். |
No comments:
Post a Comment