Sunday, March 7, 2010

'3 இடியட்ஸ்' படத்துக்கு 6 பிலிம்பேர் விருதுகள்


55-வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நடந்தது. இதில் அமீர்கான், மாதவன், ஷர்மன் ஜோஷி நடித்த “3 இடியட்ஸ்” இந்திப்படம் 6 விருதுகளை பெற்றது.



இந்த படத்துக்கு சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த துணை நடிகர், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த வசனம் ஆகிய 6 விருதுகள் கிடைத்தன.

“பா” படத்தில் குழந்தையாக நடித்த அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. “பா” படத்தில் அமிதாப்பச்சனுக்கு அம்மாவாக நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

சிறந்த இயக்குனருக்கான விருது ராஜ்குமார் ஹிரானிக்கும் (3 இடியட்ஸ்), சிறந்த துணை நடிகருக்கான விருது போமன் இரானிக்கும் (3 இடியட்ஸ்), சிறந்த துணை நடிகைக்கான விருது கல்கி கோச்லினுக்கும் (தேவ் டி), சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஏ.ஆர். ரகுமானுக்கும் (டெல்லி 6), சிறந்த பாடலாசிரியருக்கான விருது இர்ஷாத் கமிலுக்கும் (ஆஜ்தின் சட்யா, லவ் ஆஜ்கல்) கிடைத்தது.

சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை மோஹித் சவ்கான் (மசகபி, டெல்லி 6), சிறந்த பின்னணி பாடகிக்கான விருதுகளை கவிதா சேத் (இக்தாரா, வேக் அப்சித்), ரேகா பரத்வாஜ் (ஜென்டா போல், டெல்லி 6) ஆகியோரும், சிறந்த கதை, வசனத்துக்கான விருதுகளை அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி (3 இடியட்ஸ்) ஆகி யோரும், திரைக்கதைக்கான விருதுகளை அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி, விது வினோத் சோப்ரா (3 இடியட்ஸ்) ஆகியோரும் சிறந்த எடிட்டிங்குக்கான விருதை ஸ்ரீகர் பிரசாத் (பிராக்) ஆகியோரும் பெற்றனர்.

சிறந்த வாழ்நாள் சாதனை யாளருக்கான விருது சசிகபூர், கய்யாம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

விருது வழங்கும் விழாவையொட்டி நடிகர், நடிகைகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

No comments:

Post a Comment