Sunday, March 7, 2010

கௌரவ வேடத்தில் ஆர்யா


இன்றைய இளம் கதாநாயகர்கள் ஈகோ பார்ப்பதில்லை. அதற்கு சிறந்த உதாரணம் பரஸ்பரம் மச்சான், மாப்பிள்ளை என்று அன்பொழுக கூப்பிடுவதும் அடுத்தவர் படத்தில் சின்னக் காட்சிகளிலும் ஓடோடிச் சென்று நடித்துக் கொடுப்பதும்தான்.


சிவா மனசுல சக்தி படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்தார் ஆர்யா. அதேபோல் இன்னொரு படத்திலும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தை இயக்கியிருப்பவர் பூபதி பாண்டியன்.

மலைக்கோட்டைக்குப் பிறகு புதுமுகங்கள் பாலா‌ஜி, மேகனா சுந்தர் நடித்த படத்தை பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார். படத்துக்கு இன்னும் பெய‌ரிடப்படவில்லை. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் ஆர்யா.

விரைவில் படத்தை திரைக்கு கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறார் பூபதி பாண்டியன். இதையடுத்து அவர் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment